பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : ஹம்சலேகா
ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன்
புது பாடம் சொல்கிறேன்
நீ கேட்டு நடக்க வேண்டும்
வழிப் பாத்து நடக்க வேண்டும்
புகழ் வானில் பறக்க வேண்டும்
ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன்
புது பாடம் சொல்கிறேன்
நீ கேட்டு நடக்க வேண்டும்
வழிப் பாத்து நடக்க வேண்டும்
புகழ் வானில் பறக்க வேண்டும்
ஆண் : உதயமாகும் புதிய வானம்
ஆண் : இதயம் யாவும் இனிய கானம்
ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன்
புது பாடம் சொல்கிறேன்…
ஆண் : நீ அன்புக்கு கொடி காட்டு
அது வாழ்க்கைக்கு வழிக் காட்டும்
வரும் ஆசைக்கு தடை போடு
அது வெற்றிக்கு துணை ஆகும்
செல்லும் வழி பூந்தோட்டம் உனைத் தாலாட்டும்
இந்த ஊரே பாராட்டும்
ஆண் : உன் பள்ளியில் ஒரு பாடம்
இன்னும் இருக்குது ஏராளம்
தாய் தந்தையின் சொல் கேட்டு
தமிழ் வீரத்தை நிலை நாட்டு
குற்றங்களை கண்டால் நீயும்
போராடு அதை வீழ்த்தும் துணிவோடு
ஆண் : உலகமே உனை வணங்குமே
நீ தமிழை பாடும்போது
ஆண் : தடைகள் யாவும் உடையுமே
நீ வீரனாகும் போது
ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன்
புது பாடம் சொல்கிறேன்
ஆண் : நீ கேட்டு நடக்க வேண்டும்
வழிப் பாத்து நடக்க வேண்டும்
புகழ் வானில் பறக்க வேண்டும்
ஆண் : வரும் கொடுமைக்கு கலங்காதே
அதை முடித்திட தயங்காதே
படுபாவிகள் நடமாட்டம்
இந்த நாட்டுக்கு ஆகாதே
உனக்கொரு காலம் உண்டு
கடமை உண்டு படைத்திடு வரலாறு
ஆண் : நெஞ்சுக்கு பலம் வேண்டும்
அது நேர்மையில் வர வேண்டும்
நம் அறிவுக்கு புகழாரம்
அயல் நாட்டவர் தர வேண்டும்
உனக்கொரு பாதை உண்டு
பயணம் உண்டு பணிவாய் நடை போடு
ஆண் : துணிந்த பின் உன் தோள்களில்
இனி தோல்வி என்பதில்லை ஹாஹ்
ஆண் : எளிமையும் மன பொறுமையும்
புரட்சி தலைவனாக்கும் உன்னை
ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன்
புது பாடம் சொல்கிறேன்
ஆண் : நான் கேட்டு நடக்கப் போறேன்
வழிப் பாத்து நடக்கப் போறேன்
புகழ் வானில் பறக்கப் போறேன்
ஆண் : உதயமாகும் புதிய வானம்
ஆண் : இதயம் யாவும் இனிய கானம்
இருவர் : ஒரு பாடல் சொல்கிறேன்
புது பாடம் சொல்கிறேன்…