ஓரஞ்சாரம் உஷாரையா உஷாரு அய்யா உஷாரு
வேட்டுப் போல பாட்டு வருதே உஷாரு நீயும் உஷாரு
அய்யாதானே தாயாரு வெத்துக் கோபம்
எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு….ஓரஞ்சாரம்)
ராகத்தோடு தாளம் வந்து போட்டி போட பாக்குது
(அய் திருட்டு படவா
என்னடா தேஷ் ராகத்துக்கு மாத்திட்டே
அதெல்லாம் நமக்கு தெரியாது ஐயிரே
பேஷ் பேஷ்
நிஸரி பாமகரி மபநிதம பநிநிஸா...)
ரோஷம் எல்லாம் மாறிப் போயி தேஷ் ராகம் கேக்குது
கட்டி இழுக்கும் ராகம் தான் உன்ன தட்டி கேக்காதா
எட்டி இருந்து கேட்டாலும் உன்ன தொட்டு புடிக்காதா
ராகத்தில் ஏன் அன் டச்சபிள் உனக்கென்ன ட்ரபிள்
சொன்னது நம்மாளல்ல மார்டின் லுதர் துரையா ஓ...(ஓரஞ்சாரம்)
பச்ச வயலில் வாக்கிங் போனா
ஒனக்கு யார் துண ஐயரு
தொவச்சுப் போட்டு அழுக்கு எடுத்தா
என்ன எதுக்கு வையிற
நமக்குள் இருக்கு சம்திங்கு இது ஓவர் ஆக்டிங்கு
பந்து இல்லா பேட்டிங்கு ஓங் கணக்கு மிஸ்ஸிங்கு
ஒனக்கு நான்தான் காம்பினேஷன்
என்ன கன்ஃபூஷன் டென்ஷன விட்டுப் புட்டு
மனுஷனா நடந்தா என்னய்யா ஹோ... (ஓரஞ்சாரம் )