காயத்திரி கேட்கும் மாயத் திரை விலகும்
இது பொன் மாலையடியோ
தூண்டாத் திரி எரியும் அதில் காதல் ஒளி தெரியும்
இது யார் வேலையடியோ
வாரத்தில் ஒரு நாள் உன்னால் விரதம்
வாலிபம் வந்து வந்து வாட்டுதடியோ..(காயத்ரி )
ஆனந்தூரி அழகுத் தூரி
ஆடும் தேவதை யார் மகளோ
மேகத் தூரி என்னைத் தானே
பாடும் மன்மதன் யார் இவனோ
மின்னலிலே வகிடெடுத்த பொன் உருவம் இதுவோ
பின்னலுக்கு மின்மினியை சூடி வரும் அழகோ
கந்தர்வ ராகம் கேட்கின்ற நேரம்
ஆனந்தம் அம்மம்மா.......(காயத்ரி)
வானில் தோன்றும் வர்ண ஜாலம்
எந்த ஓவியன் தீட்டியதோ
வானம்பாடி பாடும் பாடல்
எந்தப் பைங்கிளி சொல்லியதோ
சூரியனின் சந்ததியில் வந்தவன் தான் இவனோ
வெண்ணிலவின் கை பிடிக்க சம்மதம் தந்தவனோ
வையகம் யாவும் வாழ்ந்திடும் காலம்
ஆனந்தம் அம்மம்மா...(காயத்ரி)