பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
ஆண் : ஊருக்கு உழைத்தாள்…
சட்ட ஒழுங்கு அதை காத்தாள்…
ஆண் : காவல் துறைக்கே
இவள் கண்ணியம் சேர்த்தாள்
தர்ம தேவதை
இவள் தர்ம தேவதை
ஆண் : காவல் நிலையம் எல்லாம்
கோவில் என கண்ட மகள்
அங்கு தெய்வத்தைக் காணாமல்
கண் கலங்கிப் போகின்றாள்
ஆண் : வேலியே பயிர்களை
மேய்வது கண்டாள்
வெந்தாள் நொந்தாள்
வெளியேறி வந்தாள்
ஆண் : நீதி வழி நின்ற மகள்
வீதி வழி புறப்பட்டாள்
பாதி வழி வருகையிலே
பகைவரிடம் அகப்பட்டாள்
ஆண் : புலியை சாய்ப்பதற்கு
பூனைகள் வந்ததம்மா
விளக்கை அணைப்பதற்கு
விட்டில்கள் வந்ததம்மா
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும்
மறுபடியும் தருமம் வெல்லும்
ஞாயங்கள் சாவதை
நீதி நிலை குலைந்து போவதை
பொறுப்பாளோ….. மாட்டாளோ…. தர்ம தேவதை…