பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
உள்ளத்திலே நல்ல உள்ளம்
உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்
ஆண் : எல்லாரும் கொண்டாடும் நல்லவன் தான்
பொல்லாத புலியானான்….
இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்
நம்பிக்கை ஒளியானான்…
ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
ஆண் : விழுந்த பின்னும் விதையைப் போலே
எழுந்து நின்னானே
விருட்சமாகி ஊருக்கெல்லாம்
நிழலைத் தந்தானே
ஆண் : மக்களெல்லாம் கும்புட்டு வணங்கும்
மன்னன் இவன் தானே
மந்தைக்கெல்லாம் மேய்ப்பனைப் போல
காவல் இருப்பானே..
துன்பத்தில் யாருக்கும் கைக் கொடுப்பான்
துக்கத்தை தீர்த்து கண் துடைப்பான்
ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
ஆண் : இருண்ட வீட்டில் விளக்க எடுத்து
ஏத்தி வைப்பானே
இவன நம்பி உலையை வைப்பாள்
ஏழை தாய்தானே
ஆண் : இல்லாருக்கெல்லாம் வள்ளலப் போல
எல்லாம் தருவானே
எங்க நீதி கண்கள மூடும் அங்க வருவானே
ஆண் : வீரத்தில் இவன் போல் வேங்கை இல்லை
உள்ளத்தப் பாத்தா பச்சப்புள்ள
ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
உள்ளத்திலே நல்ல உள்ளம்
உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்
ஆண் : எல்லாரும் கொண்டாடும் நல்லவன்தான்
பொல்லாத புலியானான்….
இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்
நம்பிக்கை ஒளியானான்…
ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்….