பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : எலேய் அம்மாசி….சன்னாசி….
அருக்காணி….ஏய்….மருதாணியோ
பெண் குழு : என்ன
ஆண் குழு : என்ன
பெண் குழு : என்ன
ஆண் குழு : என்ன
ஆண் : கோட்டச்சாமி தப்பிச்சுட்டான்
காட்டுப் பக்கம் வந்துப்புட்டான்
கோட்ட கோட்ட தாண்டிப்புட்டான்
போலீச டபாய்ச்சுட்டான்
பெண் குழு : எப்படி
ஆண் குழு : எப்படி
பெண் குழு : எப்படி
ஆண் குழு : எப்படி
ஆண் : காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்
காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்
ஆண் : போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்
ஆண் : காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு : அம்மாடியோவ்
ஆண் : காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு : அப்பாடியோவ்
ஆண் : போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
குழு : போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்
ஆண் : காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு : அம்மாடியோவ்
ஆண் : காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு : அப்பாடியோவ்…….ஆத்தாடியோவ்….
ஆண் : கோடை மழை ஊத்துறதே வேருக்காகத்தான்
கோட்டைச்சாமி வாழுறதே ஊருக்காகத்தான்
ஆண் : ஓடுகிற காத்த இங்க புடிக்க முடியுமா
ஆண் : வானவில்ல ராமனாலும் ஒடைக்க முடியுமா
ஆண் : துணிஞ்சு எப்போதும் ஹான் திரியும் நம்மாளு
ஆண் : வலையில் சிக்காமல் வழுக்கும் செம்மீனு
ஆண் குழு : காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப
ஆளிருக்கா
பெண் குழு : காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப
ஆளிருக்கா
ஆண் : காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு : அம்மாடியோவ்
ஆண் : காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு : அப்பாடியோவ்…….
ஆண் : போக்கிரிங்க மூக்கறுக்கும்
குழு : கோட்டச்சாமிதான்
ஆண் : போலீசுக்கு நாமத்தையே
குழு : போட்ட சாமிதான்
ஆண் : காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு : அம்மாடியோவ்
ஆண் : காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு : அப்பாடியோவ்…….ஆத்தாடியோவ்….ஒ…
ஆண் : குருத மேலே ஏறிப்புட்டான் மருத வீரன்தான்
ஆண் : ஒருத்தருக்கும் புடிபடாத பெரிய சூரன்தான்
அண்ணே
ஆண் : எருதுப் போல எழுந்து நிக்கும் மருது பாண்டியே
ஆண் : ஈரமான நெஞ்சமுள்ள வீரப்பாண்டியே
ஆண் : அழுதா கண்ணீர துடைப்பான் நம்மாளு
ஆண் : அவன்தான் வந்தாச்சு ஹான் அடிடா மத்தாளம்
ஆண் குழு : ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா
யார் இருக்கா
பெண் குழு : ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா
யார் இருக்கா
ஆண் : காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு : அம்மாடியோவ்
ஆண் : காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு : அப்பாடியோவ்…….
ஆண் : போக்கிரிங்க மூக்கறுக்கும்
குழு : கோட்டச்சாமிதான்
ஆண் : போலீசுக்கு நாமத்தையே
குழு : போட்ட சாமிதான்
ஆண் : காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு : அம்மாடியோவ்
ஆண் : காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு : அப்பாடியோவ்…….ஆத்தாடியோவ்….ஒ…