ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே.....
அலையோடு ஆழி சேர்ந்தே
ஆனந்தமாவதே போல்
நலமாக நாமும் சேர்ந்தே
பேரின்பங் காணுவோமே
உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால்
யுகமே வினாடியாகும்
கவலை பறந்து போகும்
காலம் பொன்னானதாகும்
குறையே இல்லாது இன்பம் காண்போம்
வாழ்வே குதூகலந்தான்
வாழ்வே குதூகலந்தான்......
ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே.....
மாங்குயில் பாடும் மயில் ஆடும்
இளமான்கள் ஓடும்
மாமலை ஓரம் இந்த நேரம்
வெகு வேகம் செல்வோம்
நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ
குறையே இல்லாது இன்பங் காண்போம்
வாழ்வே குதூகலந்தான்
வாழ்வே குதூகலந்தான்.....(ஓடம் ஏறிச்)