கிராமத்து இதயம் பேரன்பின் நிலையம்
கிராமத்து இதயமே பேரன்பின் நிலையம்
ஆனந்தம் அலை வீசும் எந்நாளும் இங்கே
பூமியில் ஈடிதற்கு எங்கே....ஓ.....ஓஒ.....ஓஒ.
பூந்தென்றலிலாடி நெல்மணி தேடி
பூந்தென்றலிலாடி நல் நெல்மணி தேடி
மாடத்தைத் தேடி வரும் ஜோடிப் புறாவே
கிராமத்தின் கீதத்தைப் பாடு...
வலிமை கொண்ட உழவர்கள்
காட்டை நாடாகச் செய்தார்
வயல்களில் தம் வேர்வையை
ஆற்று நீராகப் பெய்தார்
பயிர்கள் வளர்ந்து கதிர்கள் விளைத்து
மண்ணைப் பொன்னாக மாற்றும்
வலிமை கொண்ட உழவனே
நீயே சௌபாக்ய தூதன்......
அமரர் லோகம் போலே என்றும்
அன்புடன் அழகும் கொஞ்சும் கிராமம்
வளமிகு மண்ணின் மேலே என்றும்
வைரம் விளைகின்ற கிராமம்.....(கிராமத்தின்)