பாடகர்கள் : திப்பு மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர் : அம்ரிஷ் கணேஷ்
ஆண் : அட நேரம் இந்த நேரம்
ஹையோ என்னென்னமோ நேரம்
என் நரம்புக்குள்ளே கைகள் தட்டும்
காதல் ரீங்காரம்
குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : அட மாறும் யாவும் மாறும்
என் மௌனம் போகும் தூரம்
என் கனவுக்குள்ளே உந்தன் ஓசை
காதல் கடிகாரம்
குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : மழை இல்லா மேகம் போல
நான் இருந்தேன்
நதி போல என்னை நீதான்
மாற்றினாயே…ஏ….
பெண் : விடை இல்லா கேள்வி போல
நான் இருந்தேன்
விளையாடும் குழந்தை போல
மாற்றினாயே…ஏ….
ஆண் : பழகாத இடம் எல்லாம்
பறந்து ஓடி ரசிப்போம்
பெண் : அனல் காற்று வரும் போது
அலையோடு வசிப்போம்
ஆண் : அடி உன்னாலே என் வானம்
தூரம் இல்லை
பெண்ணே நீ இன்றி
என் வாழ்வில் யாரும் இல்லை
குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : …………………….
குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : ஹோ ஓ
விதை தேடும் பூமி போல
நான் இருந்தேன்
விழியோடு என்னை நீதான்
நட்டு வைத்தாய்…ஆய்…..
ஆண் : இளைப்பாற கூடு தேடி
நான் அலைந்தேன்
இதழாலே நெற்றி மீது
பொட்டு வைத்தாய்…ஆய்….
பெண் : இரவோடு நிலவாக
அணையாமல் இருப்போம்
ஆண் : இமையோடு இமை கோர்த்து
இலையாக பறப்போம்
பெண் : உன் கண்ணாலே என் கண்ணில்
ஈரம் இல்லை
இன்னும் நீ கேட்டால்
நான் சொல்ல நேரம் இல்லை
குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : அட நேரம் இந்த நேரம்
என் கன்ன குழி ஓரம்
நீ முழ்கி வந்து முத்தெடுத்தால்
காதல் முன்னேறும்
ஆண் : அட மாறும் யாவும் மாறும்
நீ நெருங்கி வந்த நேரம்
உன் இதழ்கள் தந்த உணவு தானே
காதல் ஆகாரம்
குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : ஹோ….ஓ…..ஹோ….ஓ….