பாடகர் : அம்ரிஷ்
இசையமைப்பாளர் : அம்ரிஷ் கணேஷ்
ஆண் : அச்சம் நீக்கி காக்கும் கைகள்
நச்சு பாம்பை நசுக்கும் கால்கள்
உச்ச நீதி காட்டும் கண்கள்
பெற்றவன் கற்றவன்
ஆண் : சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான்
பார்வையாலே ஆட்சி செய்வான்
காக்கி சட்டை புரட்சிக்காரன்
காட்சிதான் மீட்சிதான்
ஆண் : …………………..
ஆண் : வெயில் மழை
அனல் புனல்
வீசிடும் புயலிலும்
விழிப்பவன்
ஆண் : புத்தியாலே
லத்தியாலே
மர்மத்தின் முடிச்சை
அவிழ்ப்பேன்
ஆண் : இவன் தன்னந்தனி
உளவுத்துறை ஊடகம்
இவன் கண்கள் பார்க்கும்
போலிகளின் நாடகம்
ஆண் : தடயத்தை காணும்
இதயம் இவன்
தொப்பி போட்ட
துப்பாக்கி இவன்
ஆண் : அச்சம் நீக்கி காக்கும் கைகள்
நச்சு பாம்பை நசுக்கும் கால்கள்
உச்ச நீதி காட்டும் கண்கள்
பெற்றவன் கற்றவன்
ஆண் : சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான்
பார்வையாலே ஆட்சி செய்வான்
காக்கி சட்டை புரட்சிக்காரன்
காட்சிதான் மீட்சிதான்
ஆண் : கூர்மையும் நீ
நேர்மையும் நீ
ஆணிவேர் பிடுங்கிடும்
பிரம்படி
ஆண் : கடல்கூட
பிளக்குமே
கம்பீரமான
கைத்தடி
ஆண் : காயம் போக்கி
நியாயம் காக்கும் உள்ளம்மடா
மாயம் கண்டு மர்மம் கண்டு
வெல்லுமடா
ஆண் : தடயத்தை காணும்
இதயம் இவன்
தொப்பி போட்ட
துப்பாக்கி இவன்
ஆண் : அச்சம் நீக்கி காக்கும் கைகள்
நச்சு பாம்பை நசுக்கும் கால்கள்
உச்ச நீதி காட்டும் கண்கள்
பெற்றவன் கற்றவன்
ஆண் : சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான்
பார்வையாலே ஆட்சி செய்வான்
காக்கி சட்டை புரட்சிக்காரன்
காட்சிதான் மீட்சிதான்