நெஞ்சமே வாழ்க நீ
நெஞ்சமே வாழ்க நீ
இந்தக் காதல் எங்கள் வாழ்வில்
என்றும் பொங்குக
நெஞ்சமே வாழ்க நீ
நெஞ்சமே வாழ்க நீ
புதிய எண்ணம் கொண்ட இன்பம்
பூத்து மலருக...
மங்கையை தூண்டுவதோ மொழியிலே
மல்லிகை ஏங்குவதோ முடிவிலே
கொஞ்சும் பருவக்கொடி அசைந்ததே
என் சிந்தை கவர்ந்த இடை நடந்ததே
சித்திர கூட்டம் வந்து ஓடின
முத்துக்கள் உன்னைக் கண்டு நாணின
கவிதை சொல்ல நிலவு வந்ததா – தன்
கடமை என்று காவல் நின்றதா
பாடலைக் கேட்டு இன்னும் துள்ளவா
பைங்கிளி வாட்டமென்ன சொல்லவா
குழந்தை என்ற முறையில் ஓடி வா
தவழ்ந்து நின்று அமைதி கொண்டு வா