குமரிப் பெண்ணை பார்த்தாயா
குறுக்கே வரலாமா வந்தால் தொடலாமா
நெஞ்சமென்ன துள்ளுமோ
நெனச்சு நெனச்சு துடிக்குமோ
கொஞ்சிப் பேச நினைத்தாயா
குறுநகை பூத்தாயா குங்குமம் சிவந்தாயா
இன்னும் நான் ஏங்குவதா
என்ன என்ன மயக்கமோ
நீராடும் வைகையிலே
நீ வந்து நின்ற முதல்
நாள்தோறும் தேடினேன்
ஏன் உன்னை தேடினேன்
காதலைத் தடுப்பதில்லை
கண் வீச்சு தோற்றதில்லை
ஏன் உன்னை நான் பார்த்தேன்
எனக்கும் அதே சூழ்நிலை.....(குமரி)
கடமை வீரனுக்கு
கன்னி மகள் வேண்டுமோ
கற்பனை செய்வதனால்
கட்டிக் கொள்ள தூண்டுமோ
கொடுவாள் ஒரு கையில்
குமரி மறு கையில்
இதுவே வீரனை
எடுத்துக் காட்டும் சாதனை
இதயங் கவர்ந்த சாதனை....(கொஞ்சிப்)