பாடுவீரோ தேவரே
பரணி, கலம்பகம், உலா ஏதேனும்
ஈருகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம் ஏனும் அறிவீரோ
நெல்லாடிய நிலம்மெங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய்த்தின்ற மண்ணே, தாய்த்தின்ற மண்ணே
கயல் விளையாடும் வயல் வெளித்தேடி
காய்ந்துக்கழிந்தனக் கண்கள்
காவிரி மலரின் கடிமனம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றில்
தேன்சுவைக் கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக்கொடிப்பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறிப்பொறிப்பதுவோ......
காற்றைக்குடிக்கும் பாமரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ, மன்னன் ஆளுவதோ