இந்தப் பாதை எங்குப்போகும்
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே......
இந்தத்தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்
நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்
நான் ஒரே இலைதான் இந்தக்காட்டில்
நான் ஒரே இலைதான் இந்தக்காட்டில்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ.........
இந்தப் பாதை எங்குப்போகும்
முதலும் முடிவும் இல்லை
இலக்குகள் எல்லைகள் இல்லை
கரையின் தொல்லை கடலில் இல்லை
கடலும் மறைந்தால் மனம் இல்லை
ஆடி கூத்தாடி நீ பிரிந்தால் ஏது சோகம்
உலகை பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்
ஓடம் நதியில் போகும் நதியும் ஓடமே போகும்
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை
மரங்கள் இங்கு பேசும் பனித்துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா.......
நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்
நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்