பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர்
பெண் : நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீதான் எந்தன் உலகம்….ம்ம்ம்…..
பெண் : நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
பெண் : வாவென்றேன் உன்னை
வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை
தந்தாய் என் கண்ணே
பெண் : வாவென்றேன் உன்னை
வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை
தந்தாய் என் கண்ணே
ஆண் : கண்ணுக்குள் மணியாய்க்
கலந்தே நீ வாழ்க
மண்ணுக்கு புகழாய்
மகனே நீ வாழ்க
பெண் : நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
பெண் : தோட்டத்துக் கொடிக்கு
பூவால் சிறப்பு
வாழும் வீட்டுக்கு
ஏற்றும் விளக்கால் சிறப்பு
பெண் : தோட்டத்துக் கொடிக்கு
பூவால் சிறப்பு
வாழும் வீட்டுக்கு
ஏற்றும் விளக்கால் சிறப்பு
பெண் : பாட்டுக்குப் பொருளின்
நயத்தால் மதிப்பு
பசு மாட்டுக்குப் பிறந்த
கன்றால் மதிப்பு
பெண் : கொடி தந்த பூவாய்
பூ தந்த மணமாய்
மடி மீது வளர்ந்தாய்
மகனே நீ வாழ்க
பெண் : நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
பெண் : கண் பார்க்கும் இடத்தில்
நீ தான் இருப்பாய்
எந்தன் கை தீண்டும் பொருளில்
நீ தான் இருப்பாய்
பெண் : கண் பார்க்கும் இடத்தில்
நீ தான் இருப்பாய்
எந்தன் கை தீண்டும் பொருளில்
நீ தான் இருப்பாய்
பெண் : பண் சேர்த்துப்
பாடும் பாட்டில் இருப்பாய்….
நான் பார்க்கின்ற எதிலும்
நீ தான் இருப்பாய்…..
பெண் : அன்புக்கு வடிவாய்
பண்புக்குப் பொருளாய்
இன்பத்தின் சுவையாய்
என்றென்றும் வாழ்க
பெண் : நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்