பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏ கட்டில் இல்ல
மெத்தை இல்ல
பாய போடு….
நான் கண் உறங்க
பக்கம் வந்து ராகம் பாடு….
ஏ ராத்திரிக்கு நீ இருந்தா
குளிர் போகும்….
நீ ஆதரிச்சா சொர்க்கம்
இங்க வந்து போகும்…..
பெண் : நீ அப்போது பார்த்த புள்ள
குழு : ஆஹாஹா
பெண் : இப்ப அடையாளம்
தெரியவில்லை
குழு : ஆஹாஹா
பெண் : அட என்னமோ சொல்லுற
அட என்னமோ சொல்லுற
எங்கயோ கிள்ளுற
பெண் : என் போதை தெளியவில்லை
குழு : ஆஹாஹா
பெண் : அட என்னான்னு
விளங்கவில்லை
குழு : ஆஹாஹா
பெண் : நீ அப்போது பார்த்த புள்ள
குழு : ஆஹாஹா
பெண் : இப்ப அடையாளம்
தெரியவில்லை
குழு : ஆஹா……
ஆண் : நேத்து பார்த்தேன்
கொஞ்சி போன புள்ள
இப்ப பார்த்த நெஞ்சு
தாளவில்லை
வார்த்தையால சொல்ல
ஏதும் இல்ல வாரி போட்டா
ஏதும் சேதம் இல்ல
குழு : ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
ஆண் : எடுத்து போன என்னோடு நெஞ்சு
இன்னும் வந்து சேரவில்லை
கொடுத்து போன பூவான காயம்
கொஞ்சம் கூட ஆறவில்லை
நீரோட சேர்ந்த ஹே…..
நீரோட சேர்ந்த
நீராக நாங்க
சேர்ந்தாச்சு பிரியவில்லை…
ஆண் : அட நீ உள்ள மனசே
இல்லாம பிரிக்க
என்னால முடியவில்லை
பெண் : நீ அப்போது பார்த்த புள்ள
குழு : ஆஹாஹா
பெண் : இப்ப அடையாளம்
தெரியவில்லை
குழு : ஆஹா……
ஆண் : தண்ணி அடிச்சும்
சோகம் காயவில்லை
என்ன நினைச்சும்
பாசம் தேயவில்லை
கண்ணா மறைச்சேன்
காதல் செஞ்ச தொல்லை
கடைசி வரைக்கும்
பாதை மாறவில்லை
குழு : ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
ஆண் : விளங்கிடாத பெண்ணோடு மனசு
வேலி போட்ட மாயம் என்ன
கலங்கிடாத என்னோட நெனப்பு
காஞ்சி போகும் மர்மம் என்ன
அன்பான நெஞ்சே ஹே….
அன்பான நெஞ்சே
கண்ணாடி போல
தூளாக்கி போட்ட புள்ள
ஆண் : நீ இல்லாம எனக்கு
சந்தோசம் ஏது
என் கண்ணு தூங்கவில்லை….
ஆண் : நீ அப்போது பார்த்த புள்ள
குழு : ஆஹாஹா
ஆண் : இப்ப அடையாளம் தெரியவில்லை
குழு : ஆஹாஹா
ஆண் : அட என்னமோ சொல்லுறா
அட என்னமோ சொல்லுறா
என்னையே தள்ளுறா
ஆண் : என் போதை தெளியவில்லை
குழு : ஆஹாஹா
ஆண் : அட என்னான்னு
விளங்கவில்லை
குழு : ஆஹாஹா
குழு : தன்னனா தானானா
தன தன்னனா தானானா
தன்னனா தானானா
தன தன்னான தானனனா