பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண் : நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண் : இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்
பெண் : நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண் : கண்ணில் ஒரு மன்னன் தரும்
வண்ணக் கலையோ
கண்ணா இவள் உன்னால்
இனி மின்னும் சிலையோ
கண்ணில் ஒரு மன்னன் தரும்
வண்ணக் கலையோ
கண்ணா இவள் உன்னால்
இனி மின்னும் சிலையோ
பெண் : பனித் தேர் வீதியில்
ஊர்வலமோ……ஓ…….ஓ……ஓ…
பனித் தேர் வீதியில் ஊர்வலமோ
எண்ணம் பல சொல்லும் வழி கண்ணின் தடமோ
இன்னும் கலை சொல்லித் தரும் கன்னித் தமிழோ
பெண் : நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண் : அந்திச் சுகம் அள்ளித் தரும்
சந்தக் குயிலோ
பெண் தேகமும் என் தேவனின்
சிந்தைக் களமோ
அந்திச் சுகம் அள்ளித் தரும்
சந்தக் குயிலோ
பெண் தேகமும் என் தேவனின்
சிந்தைக் களமோ
பெண் : மனத்தால் வார்த்திடும்
பூச் சரமோ… ஓ… ஓ… ஓ…
மனத்தால் வார்த்திடும் பூச் சரமோ
அங்கம் தனில் கங்கைக் கரை தங்கும் சுகமோ
பொங்கும் புனல் மங்கை மனம் உன் கை வரமோ
பெண் : நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண் : இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்
பெண் : நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்