பாடகர்கள் : மனோ மற்றும் ஷோபா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நம்பினேன் மகராஜனே
நம்பியது வீணில்லையே
கண்ணன் போல் கொடுத்தேயே
வண்ணப் பூஞ்சேலை
இல்லையில் அவமானம்தான்
பெண் : நம்பினேன் மகராஜனே
நம்பியது வீணில்லையே
பெண் : நன்றியை வாயாரவே சொல்ல
ஓர் மொழி இல்லையே
கண்ணன் போல் கொடுத்தாயே
வண்ணப் பூஞ்சேலை
இல்லையில் அவமானம்தான்
திரௌபதி தனைக் காத்த
தெய்வம் போல் நீயே
கண்ணனின் அவதாரம்தான்
பெண் : நம்பினேன் மகராஜனே
பெண் : மஞ்சள் பூசுவேன்
உந்தன் பேரைச் சொல்லி நானே
இரவில் மடி மேல் தாலாட்டுவேன்
நெற்றிக் குங்குமம்
உந்தன் நெஞ்சில் சேரும் வண்ணம்
வெள்ளமே நதியில் நீராட்டுவேன்
ஆண் : அச்சம் என்பதொன்று
இங்கு மிச்சம் இல்லை என்று
பச்சை வண்ணப் பூவே
அந்தப் பாடல் சொல்லு இன்று
பெண் : அன்னை தந்தை
எல்லாம் நீயாக
இந்த அன்னம் வந்தாள்
உந்தன் சேயாக
பெண் : நம்பினேன் மகராஜனே
நம்பியது வீணில்லையே
ஆண் : தென்றல் என்பது
எந்தன் தோட்டம் வந்த போது
அடடா அது ஓர் பெண்ணானதோ
ஆண் : செம்மீன் என்பது
எந்தன் ஓடை வந்த போது
அதுவோ முகத்தில் கண்ணானதோ
பெண் : கோடை வெயில் வாட்ட
இந்த கோதை வந்த வேளை
வாடை காற்று கொண்டு
நீயும் வாட்டம் தீர்த்த சோலை
ஆண் : உன்னை விட்டு எங்கும் செல்லாது
எந்தன் கண்கள் என்றும்
கண்ணே உன் மீது
பெண் : நம்பினேன் மகராஜனே
நம்பியது வீணில்லையே
பெண் : நன்றியை வாயாரவே சொல்ல
ஓர் மொழி இல்லையே
கண்ணன் போல் கொடுத்தாயே
வண்ணப் பூஞ்சேலை
இல்லையில் அவமானம்தான்
திரௌபதி தனைக் காத்த
தெய்வம் போல் நீயே
கண்ணனின் அவதாரம்தான்
கண்ணனின் அவதாரம்தான்
கண்ணனின் அவதாரம்தான்