பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : என் ஆசை வாழைக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே
ஆண் : கல்யாணக் காட்சி முடித்தே
ஹோய் ஹோய்
கண்ணாளன் கொஞ்சும் கிளியே
ஆண் : பூங்கழுத்துக்கு
ஒரு தாலி வந்தது
பூ மரத்துக்கு
ஒரு வேலி வந்தது
வாழை மரம் பந்தல் இன்றி
மாலை வந்தது
ஆண் : என் ஆசை வாழைக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே
ஆண் : நான் ஒவ்வொன்றாய்ச்
சொல்லவா
உன்னைத்தான் கிள்ளவா
மானே இளமானே
ஆண் : மொத்தத்தைக் கொள்ளவா
மிச்சத்தை வைக்கவா
தேனே மலைத்தேனே
பெண் : நான் கன்னித்தேன் அல்லவா
தின்னத்தான் சொல்லவா
தாகம் வரும் நேரம்
பெண் : மன்னரில் பல்லவா
மண்ணிலே நல்லவா
தேகம் உன்னைச் சேரும்
ஆண் : உண்டான நேசம்
உருவான பாசம்
எல்லாம் நீதானே
என் காதல் தேசம்
பெண் : கண்ணான கண்ணா
நீ சொன்னால்
என் உள்ளத்தில்
வெள்ளம் பொங்கும்
ஆண் : என் ஆசை வாழைக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே
ஆண் : கல்யாணக் காட்சி முடித்தே
ஹோய் ஹோய்
கண்ணாளன் கொஞ்சும் கிளியே
பெண் : எனைத் தென்றல்தான்
தொட்டதும்
தீயைப் போல் சுட்டதும்
ஏனோ அது ஏனோ
பெண் : எண்ணங்கள் கெட்டதும்
அச்சங்கள் விட்டதும்
ஏனோ அது ஏனோ
ஆண் : அப்பப்போ ஏதேதோ
கற்பிக்கும் காதல் நோய்
தானோ இது தானோ
ஆண் : சிப்பிக்குள் தன்னாலே
முத்துக்கள் உண்டாக
தானோ அது தானோ
பெண் : புல்வெளி மேலே
பனி நீரைப் போலே
உன் மடி மேலே உறவாடும் நாளே
ஆண் : முத்தான முத்து பூங்கொத்து
பூ மஞ்சத்தைப் போட்டுக் கொள்ளு
பெண் : உன் ஆசை வாழக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே
பெண் : கல்யாணக் காட்சி முடித்தே
ஹோய் ஹோய்
கண்ணாளன் கொஞ்சும் கிளியே
பெண் : பூங்கழுத்துக்கு
ஒரு தாலி வந்தது
பூ மரத்துக்கு
ஒரு வேலி வந்தது
வாழை மரம் பந்தல் இன்றி
மாலை வந்தது
ஆண் : என் ஆசை வாழைக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே
ஆண் : கல்யாணக் காட்சி முடித்தே
ஹோய் ஹோய்
கண்ணாளன் கொஞ்சும் கிளியே