பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
பெண் : தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
பெண் : நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
பெண் : ஒருவன் நினைவிலே…
உருகும் இதயமே இதோ துடிக்க
உலர்ந்த உதடுகள்
தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க….
மதுவின் மயக்கமே
உனது மடியில் இனிமேல்
இவள்தான் சரணம் சரணம்
பெண் : நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல மாறினேனா
பெண் : பிறையில் வளர்வதும்
பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும்
பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது……
பருவ வயதிலே
இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
பெண் : நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
பெண் : தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
பெண் : நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா