பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
பெண் : நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்
பெண் : என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
பெண் : மழைக்கால மேகம்
திரள்கின்ற நேரம்
மழைக்கால மேகம்
திரள்கின்ற நேரம்
பெண் : மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர் கூட்டம் எதிர்பார்க்கும்
இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம்
அதை நான் சொல்லவோ…
பெண் : என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
பெண் : உறங்காமல் நெஞ்சம்
உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ
மாட்டாயோ
பெண் : சுகம் கொண்ட சிறு வீணை
விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும்
நல்ல சங்கீதம் தான்
பெண் : என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
பெண் : நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்
பெண் : என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்