நான் பம்பாயின் பாபு
என் பேரே தில்லானா
இங்லீஷ் ட்யூனில் பாடுவேன்
இந்துஸ்தானி கானா ஏய்.....(நான்)
இவ்வுலகேதான் உனதே
ஆடிடுவாய் உலகோடே
சக்தி கொண்டோர் நாமே – அட
நகைத்தே நகைத்தே செல்வோம்
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா.....(நான்)
சிலரே உழைத்திடுவாரே
சிலரே தழைத்திடுவாரே
அறிவைப் பெற்றே வாழ்வீர் அட
தாழ்வை மாயத்திடுவீரே
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா....(நான்)
வந்தேன் உம்மின் பந்து
ரஷியா சீனமும் சென்றேன்
சேவைப் பாங்கை பகர்ந்தேன்
எந்தன் காமெடி கானத்திலே
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா.....(நான்)