அங்கியோடு நிஜாரணிந்தே வந்தாயே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே
எந்தன் பின்னே நீ தொடர்ந்து ஆடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே
கணம் கணம் உனை கண்டிடவும்
மனம் துடித்திடுதே மதன் கணையால்
வருவேன் நான் உன் பின்னே
கைவிலங்கு வந்தாலும் நிலை தளறேன்
யார்க்கும் நான் அஞ்சேனே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே.(எந்தன்)
மதிப்பும் கொண்டவள் நானே
பொது மகளென நீ எண்ணாதே
படே படே பயில்வானை
அஞ்சியே கெஞ்சச் செய்தேன்
கேலி செய்யக் கூடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே..(அங்கியோடு)
ரூபம் நோக்கினால் எந்தன்
மனதினிலோ காதல் சுடுதே...
செந்தாமரை கையாலே சற்று
நீக்கிடு பட்டு முகத்திரையே...
விழியாலெனைப் பாராயோ
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே...(எந்தன்)