பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆ இளநி இளநி
இளநி இளநி இளநி நான்
ஏழு வயசிலே இளநி வித்தவ
பெண் : நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ
பெண் : ஏழை பணக்காரனுக்கும்
வெறும் வேலை வெட்டி காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்க புடிச்சவ
பெண் : இளநி இளநி
இளநி இளநி
பெண் : நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ
பெண் : { தேங்காயிலே
பால் இருக்கும் அத
வாயார குடிச்சா சூடு
தணிக்கும் } (2)
பெண் : { ஓடு மட்டும்
தான் மேல் இருக்கும்
அது கை தொழில்
வேலைக்கு கை
கொடுக்கும் } (2)
பெண் : இளசான தண்ணி
இருக்கும் முத்தி போனா
என்ன இருக்கும் உப்பு
கரிக்கும் மக்கு பயலே
சப்புன்னு இருக்கும்
பெண் : நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ
பெண் : இளனியிலே
பலதிருக்கு அது இருக்குற
இடத்த பொறுத்திருக்கு இது
தானே புது சரக்கு இங்கு
மத்ததெல்லாம் கட சரக்கு
பெண் : வெயில் நேரம்
விலை ஏறும் விலை ஏற
ருசி ஏறும் சீவி குடிச்சா
உள்ள மயக்கம் மெல்ல
குறையும் இளநி இளநி
இளநி இளநி
பெண் : நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ
பெண் : { தென்ன மரமும்
பொண்ணு போல தான்
சுவை தருவதில் இரண்டும்
ஒன்னு போல தான் } (2)
பெண் : { தென்ன பாலையும்
பொண்ணு போல தான் அது
வெடிச்சா சிரிப்பது என்ன
போல தான் } (2)
பெண் : நல்லதுக்கு தான்
பொண்ணு சிரிப்பா பல்லு
இளிச்சா ஒன்னு குடுப்பா
தப்பு கணக்கு போட நெனச்சா
கன்னம் சிவக்கும்
பெண் : இளநி இளநி
இளநி இளநி
பெண் : { நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி
நின்னவ } (2)
பெண் : இளநி இளநி
இளநி இளநி இளநி