நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்
மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் நாளை உலகம்
இல்லை என்றானால்
அன்பே என்ன் செய்வாய்
ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து
இரு விழி மூடிக் கொள்வேன்
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மறிக்க வைப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்
மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்
காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூ லோகம் அழிவதில்லை
ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை
காதல் நிலமாகும் நிலம் காதலாகும்
நம் பூமி மறைவதில்லை
உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை
நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்
வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக் கொள்வேன்
ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்
என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்