இந்தக் கதை இங்கு நிற்கையில்
இன்னோரிடத்தில் ஆமா....
இன்னோரிடத்தில் நடந்த கதை சொல்லப் போறோம்
முத்துவள நாட்டை ஆண்ட கொற்றவன் சடையவர்மன் கொற்றவன் சடையவர்மன்
சத்தியம் தவறா மன்னன் செங்கோல் ஆட்சி செய்து வந்தான்
செங்கோல் ஆட்சி செய்து வந்தான்... ம்ம்ம் செய்து வந்தான்
அத்தனையும் நாசமாச்சு பேராசையாலே சொந்தக்காரன் சதியாலே
மன்னர் வாழ்க! சடைவர்மர் வாழ்க!!
மன்னர் வாழ்க! சடைவர்மர் வாழ்க!!
முறத்தாலே புலி விரட்டும் தமிழ் பெண்கள் வழி வந்த
கருத்தாலே புலி அடக்கும் மாவீரத் தமிழச்சி
இளவரசி கற்பகம் வாழ்க
கொற்றவனின் கொற்றவையின் சொந்தத் தம்பி முத்தரசன்
மச்சு மேல் நின்றிருந்த தன் மச்சானை மன்னவனை
கச்சிதமாய்க் கதை முடிக்க செங்கல்லை இளக்கி வைத்தான்
மச்சானை மயானத்துக்கு அனுப்பி வைத்த மறு மாதம்
அக்காளைத் துனைக்கனுப்பிக் கொக்கரித்தான் முத்தரசன்
அக்காளின் ஒற்றை மகள் கற்பகத்தை
வக்கிரமாய் வயப்படுத்த முற்பட்ட பாதகனை
கடித்துக் குதறிவிட்டு பித்துப் பிடித்தவளாய் மாறிவிட்டாள்
கொடுங்கோலன் ஆட்சியிலே ஆர்க்குமே அமைதி இல்லை
குற்றமுள்ள நெஞ்சு கொண்ட முத்தரசன் உட்பட
நாளையும் கோளையும் மிகையாக நம்பியவன்
வேளை மோசமெனச் சோழி போட்டுத் தெரிந்து கொண்டான்
கோர மரணம் ப்ராபிரஸ்து.....
கோர மரணமொன்று நிச்சயம் உண்டென்று
நாடியும் படித்ததினால் நிலை குலைந்தான் கொடுங்கோலன்
இத்தகைய தருணத்தில்...
உத்தமன் என்றொருவன் மொத்தமாய் ஐந்து முறை மரணத்தை வென்ற செய்தி
முத்தரசன் காதுக்கு ... அ.... மிச்சமுள்ள காதுக்கு
எட்டிய மறு கணமே உத்தமனைக் கொண்டு வர அரசானை பிறப்பித்தான்...
கல்லு வாங்கலியோ கல்லு.... கல்லு வாங்கலியோ கல்லு...
பத்து கல்லு ஒரு காசு... பத்து கல்லு ஒரு காசு...
கல்லு வாங்கலியோ கல்லு.... கல்லு வாங்கலியோ கல்லு...