காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை
காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை
காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
காமமாம் கடும் புனல்
கடந்திடும் படகிது
ஆசையா பாய் மரம்
அமைந்ததோர் படகிது
கரையை தேடி அலையும் நேரம்
உயிரும் மெழுகாய் உருகுதே
வீனையாய் மீட்டும் விரல்கள் போலே
சுண்டி சுண்டி எனை மீட்டி மகிழும்
காதலாம் ஓ
கண்களாம் ஓ
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை
பிரிந்தவர் கூடினால்
பேசவும் வேண்டுமா
மோகத்தை சொல்லிட
மொழியும் ஒர் தடை ஆகுமோ
இசையின் காலம் கணிக்கும் தாளம்
போல என்னுடன் கலக்காவா
இன்பம் அலையின் சிகரம் சேர்க்க
கொஞ்சி கொஞ்சி என் செவியில் பேசிடும்
காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை