பாடகர்கள் : கே. ஸ்வர்ணா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : முத்தம் முத்தம் செந்தேனல்லவோ
நித்தம் நித்தம் தந்தேனல்லவோ
பெண் : கண்ணா கண்ணா உன் வேகமென்ன
கன்னம் கன்னம் புண்ணானதென்ன..
இன்னும் தந்தால் பெண் என்னாவதோ….
ஆண் : முத்தம் முத்தம்
ஆண் : இதயத்திலே ஒரு கதவிருக்கும்
இரவு பகல் அது திறந்திருக்கும்
பெண் : விழிகளிலே ஒரு வழி இருக்கும்
வாவெனவே மனம் அழைத்திருக்கும்….
ஆண் : இதழ் சுவையோ இல்லை மது சுவையோ
ஹோ ஊ ஹோ ஊ ஹோ ஓஒ ஓஒ
இதழ் சுவையோ இல்லை மது சுவையோ
பிடி இடையோ இல்லை மலர்க்கொடியோ
குறுநகையோ அது சிறுகதையோ
குறுநகையோ அது சிறுகதையோ
காலமெல்லாம் வரும் தொடர்கதையோ
பெண் : முதல் முதலாய் என்ன அறிமுகமோ
ஹோ ஊ ஹோ ஒ ஓஓ
முதல் முதலாய் என்ன அறிமுகமோ
கலைகளிலே நல்ல அனுபவமோ
ரசிப்பதிலே இது புதுவிதமோ
ரகசியமாய் தொட சுகம் வருமோ…..
ஆண் : முத்தம் முத்தம் செந்தேனல்லவோ
நித்தம் நித்தம் தந்தேனல்லவோ
பெண் : கண்ணா கண்ணா உன் வேகமென்ன
கன்னம் கன்னம் புண்ணானதென்ன..
இன்னும் தந்தால் பெண் என்னாவதோ….
ஆண் : லல லல லலால லா
லல லல லலால லா