பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ், கே. ஜமுனாராணி,
கே. ஸ்வர்ணா மற்றும் எஸ். வி பொன்னுசாமி
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ…
ஆண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..
பெண் : வரவுக்கு தகுந்த சேலை எடுப்பவள் புத்திசாலி
கூந்தலுக்கேற்ற பூவை முடிப்பவள் புத்திசாலி
பெண் : வரவுக்கு தகுந்த சேலை எடுப்பவள் புத்திசாலி
கூந்தலுக்கேற்ற பூவை முடிப்பவள் புத்திசாலி
பெண் : ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ…
பெண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
ஆண் : மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று
மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று
ஆண் : மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று
மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று
வருவது வரட்டும் எதுவானாலும் வருவது வரட்டும்
எதுவானாலும் சந்திப்போம் என்று
ஆண் : ஆஹா……மனிதனுக்குள்ள கைகள் மூன்று
நம்பிக்கை ஒன்று
வருவது வரட்டும் எதுவானாலும் வருவது வரட்டும்
எதுவானாலும் சந்திப்போம் என்று
பெண் : பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
செலவில்லாமல் கடனில்லாமல்
செலவில்லாமல் கடனில்லாமல்
சேர்த்து கொள் இன்று
ஆண் : ஆஹா……பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
செலவில்லாமல் கடனில்லாமல்
செலவில்லாமல் கடனில்லாமல்
சேர்த்து கொள் இன்று
ஆண் : எனக்கந்த யோகம் இருக்கு பின்னாடி பாரு
கிடைக்காமல் போகலாகுமோ
பெண் : இந்தாங்கோ சும்மா இருங்கோ அபிஷ்டு நீங்க
எதிர்த்தென்னை பேசாதீங்கோ….
பெண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி……
பெண் : அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ…
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..
ஆண் : வீட்டுக்கு வீடு வாசற்படி
ரோட்டுக்கு ரோடு நூறு நொடி
வீட்டுக்கு வீடு வாசற்படி
ரோட்டுக்கு ரோடு நூறு நொடி
ஏட்டிக்கு போட்டி வாழ்க்கையடி
எதிர்த்து நின்னா வெற்றியடி….
ஆண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி…
ஆண் : அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ…
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..
குழு : புத்திசாலிகள்……(3)