பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
பெண் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
ஆண் : வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
பெண் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
பெண் : வெண்ணிலவை பூமியின் மேலே….ஏ…..
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
ஆண் : மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே….ஏ……ஏ……ஏ….ஏ…..
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே….
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
பெண் : விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆஅ……ஆ……ஆ……ஆ….
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே….
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
ஆண் : சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..
இருவர் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..