பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்
மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்
இடையில் இந்த வாழ்வில் இனி
எத்தனையோ சேரும் சேரும்
ஆண் : வானம் வரும் நிலவு வரும்
வசந்த காலம் பிறக்கும்
வழி நெடுக சொர்க்கங்களின்
வாசல்களும் திறக்கும்….
ஆண் : மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்
ஆண் : ஏழை வீட்டு இதய பாட்டு
எல்லோருக்கும் தெரியும்
நெஞ்சில் என்றோ வரும் வாழ்வை எண்ணி
நம்பிக்கைகள் நிறையும்
ஆண் : மழலை இவன் நாளை எங்கள்
மாளிகையின் விளக்கு
மழலை இவன் நாளை எங்கள்
மாளிகையின் விளக்கு
இந்த நிழலை விட்டால் வாழ்வதற்கு
உலகமில்லை எனக்கு…….
ஆண் : மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்
ஆண் : நித்திரைக் கால கனவில் கூட
நெஞ்சில் இருக்கும் கிளியே
என் சொத்து சுகங்கள் அத்தனையும்
உன் சொந்தம் இருக்கும் வழியே
ஆண் : சித்திரப் பூவே சின்ன நிலவே
கண்ணில் இருக்கின்றாய்
சித்திரப் பூவே சின்ன நிலவே
கண்ணில் இருக்கின்றாய்
ஒரு கொத்து மலராய் நித்தம் மணக்க
என்னில் இருக்கின்றாய்……
ஆண் : மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்
இடையில் இந்த வாழ்வில் இனி
எத்தனையோ சேரும் சேரும்
ஆண் : வானம் வரும் நிலவு வரும்
வசந்த காலம் பிறக்கும்
வழி நெடுக சொர்க்கங்களின்
வாசல்களும் திறக்கும்….
ஆண் : மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்