பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : மார்கழி மாதக் காற்று
புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து
மார்கழி மாதக் காற்று
புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து
நேராக குளுர்ந்து வந்து
ஜோராக அடிக்கையிலே
மாராப்பு சேல கொஞ்சம் கலையும்
இந்த மச்சான் மனசு அங்கு அலையும்..
இந்த மச்சான் மனசு அங்கு அலையும்…..ஹோ
பெண் : ஜாமத்திலே வெளக்க ஏத்து –
வீட்டு ஜன்னல் கதவ சாத்து
ஜாமத்திலே வெளக்க ஏத்து –
வீட்டு ஜன்னல் கதவ சாத்து
தொட்டு எடுத்து என்ன
கட்டி அணைக்கையிலே
மச்சான் மகத்துவம் புரியும்
அந்த ராத்திரி வெளக்கா எரியும்…..
அந்த ராத்திரி வெளக்கா எரியும்…..
ஆண் : வெட்கம் வெளச்சமின்னு
வேண்டாத எத்தனையோ
வேலி கட்டி நிக்குதே காவல்
வெட்கம் வெளச்சமின்னு
வேண்டாத எத்தனையோ
வேலி கட்டி நிக்குதே காவல்
ஆண் : ஒரு பக்கம் படுக்க வச்சு
பாய் போட்டு தேன் குடிக்க
பெட்டைக்கு காத்திருக்கு சேவல்
ஒரு பக்கம் படுக்க வச்சு
பாய் போட்டு தேன் குடிக்க
பெட்டைக்கு காத்திருக்கு சேவல்
ஆண் : ஒரு ஆலோலம் பாட்டு சொல்லும் கிளியே
ஹான் ஆஅ ஆஅ…..
பறக்க ஆகாயம் நிக்குதடி வெளியே….ஏ….
ஆண் : மார்கழி மாதக் காற்று
புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து
பெண் : நேராக குளுர்ந்து வந்து
ஜோராக அடிக்கையிலே
ஆண் : மாராப்பு சேல கொஞ்சம் கலையும்
இந்த மச்சான் மனசு அங்கு அலையும்..
இந்த மச்சான் மனசு அங்கு அலையும்…..
ஆண் : அன்னாடம் ஆசத் தொட்டு
ஆயிரமாய் ஏக்கம் பட்டு
காயிது வாலிப வயசு
ஆயிரமாய் ஏக்கம் பட்டு
காயிது வாலிப வயசு
பெண் : இந்த பொண்ணோட வாலிபமும்
பூவா நெறஞ்சிருக்கு
இந்த பொண்ணோட வாலிபமும்
பூவா நெறஞ்சிருக்கு
உன்னால் மயங்குதே மனசு
ஆண் : உன் மேனி அழகு வண்ண நிலவு
ஏ….ஏ…..ஏ….ஏ….
உன் மேனி அழகு வண்ண நிலவு
அத நான்தானே பண்ண வேணும் செலவு
ஆண் : மார்கழி மாதக் காற்று
புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து
மார்கழி மாதக் காற்று
புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து
நேராக குளுர்ந்து வந்து
ஜோராக அடிக்கையிலே
மாராப்பு சேல கொஞ்சம் கலையும்
இந்த மச்சான் மனசு அங்கு அலையும்..
பெண் : ஹ்ம்ம் ஹும்
ஆண் : இந்த மச்சான் மனசு அங்கு அலையும்…..ஹோ
பெண் : ஜாமத்திலே வெளக்க ஏத்து
வீட்டு ஜன்னல் கதவ சாத்து
தொட்டு எடுத்து என்ன
கட்டி அணைக்கையிலே
மச்சான் மகத்துவம் புரியும்
அந்த ராத்திரி வெளக்கா எரியும்…..
அந்த ராத்திரி வெளக்கா எரியும்…..