மயங்காத மனம் யாவும் மயங்கும்
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அழகின் முன்னாலே ஏ…ஏ..ஏ…ஏ.. ஓ ராஜா ஓ ராஜா
அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்?
அறிந்து கொள்வீரா ராஜா?
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும் ஆ…
கன்னத்திலே பழத் தோட்டம் கண்களிலே சதிராட்டம்
கன்னத்திலே பழத் தோட்டம் கண்களிலே சதிராட்டம்
கட்டழகுப் பெண் சிரித்தால் காளையர்க்குப் போராட்டம்
கட்டழகுப் பெண் சிரித்தால் காளையர்க்குப் போராட்டம்
உணர்ந்து கொண்டாலே உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை
உறவு கொண்டாலோ ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும் ஆ..
கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுறும்
கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுறும்
கன்னி என்தன் கூந்தலுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
கன்னி என்தன் கூந்தலுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
புதுமை கண்டாலே புதுமை கண்டாலே பசித்திடுமோ உனக்கு?
பொறுத்திடுவீரா ராஜா?
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும் ஆ.. ஆ…