மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்?
நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று

இருட்டினில் தவித்த இருவரைக் காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை
இருட்டினில் தவித்த இருவரைக் காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை – அந்த
இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன்
இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன் – இங்கு
யாரிடம் சொல்வேன் என் வழக்கை
நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று
நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று
முறை கெட்ட மன்னனுக்கு முடி எதற்கு?
நெறி கெட்ட நெஞ்சிற்கு நினைவெதற்கு?
கரைபட்டுப் போன இந்தக் கரம் எதற்கு?
இந்தக் கரம் எதற்கு?