பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே
ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
ஆண் : கண்மணி உனக்கொன்னு
தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது
என் மனசு
பெண் : என் மனம் உனக்கென்ன
புரியுமா
தண்ணி குடத்தில் துடிக்குது
என் உயிரு
ஆண் : நீ குளித்தால்
நதியில் மனம் இருக்கும்
பெண் : நீ ரசித்தால்
கவியின் குணம் இருக்கும்
ஆண் : வந்து விட்டேன்
மெல்ல மெல்ல
பெண் : தந்து விட்டேன்
என்ன சொல்ல
ஆண் : பாவம் அல்ல..
வேதங்கள் தடை அல்ல..
ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
ஆண் : பொருத்தம் நமக்குள்
இல்லை என்று
நீ நினைத்ததுண்டோ
நெஞ்சுக்குள்ள
பெண் : தாமிரபரணி
ஆத்து தண்ணி
அது ஜாதி பேதம்
பார்ப்பதில்லை
ஆண் : நீ நினைத்தால்
திருநீர் அணிதிருப்பேன்
பெண் : நீ தடுத்தால்
கோயில் மறந்திருப்பேன்
ஆண் : தொட்டதெல்லாம் வெற்றியடி
பெண் : வெற்றி
கண்டால் அள்ளிக்கொடி
ஆண் : கட்டிப்பிடி
பெண் : காதல் வேதம்
கற்பிக்கவா
காதில் வந்து ஒப்பிக்கவா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னை தடுக்குது
காதல் பெரிதா…
வேதம் பெரிதா…
ஆண் மற்றும் பெண் :
காதல்தானே ஜெயத்தது
ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல்
பிறர் கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல்
பிறர் கண்கள் ஏதும் காணாமல்
ஆண் மற்றும் பெண் :
ஆற்று மண்ணில் பேரை எழுதி
அழகு பார்ப்போம் அன்பே வா…
அழகு பார்ப்போம் அன்பே வா…
அழகு பார்ப்போம் அன்பே வா…