மனசு எங்கே… மனசு எங்கே… மனசு எங்கே….
மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது
சொந்த பந்தத்தோடு பந்தல நீ போடு காதலும் தான் மறந்திடுமா
பஞ்சாங்கத்த பாரு எழுதி வச்சதாரு எல்லாம் இங்கே நடந்திடுமா
நினைப்பது ஒன்னு நடப்பது ஒன்னு
மாட்டிக்கிட்டா காதல் முழிக்குது நின்னு
இமை மீதிலே இடி வந்து வீழ்ந்தால்
விழி தாங்குமோ தாங்காது தாங்காதே
ரெண்டு மாசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது
இங்கே மல்லிகையும் மலைய தாங்கும் நம்ப முடியாது
ஒரு புள்ளிக்குள்ள உலகம் அடங்கும் வெளியே தெரியாது
இது காதல் செய்யும் வேலை தானே வேற கிடையாது