பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தலைவன் திருப்பாதம் போற்றி
குழு : தலைவன் திருப்பாதம் போற்றி
ஆண் : இறைவன் திருநாமம் போற்றி
குழு : இறைவன் திருநாமம் போற்றி
ஆண் : யாவும் நலமாக எதுவும் வசமாக
குழு : யாவும் நலமாக எதுவும் வசமாக
ஆண் : மேவும் வினை தீர மேன்மை நிலை சேர
குழு : மேவும் வினை தீர மேன்மை நிலை சேர
ஆண் மற்றும் குழு :
தலைவன் திருப்பாதம் போற்றி……
ஆண் : மனமே அவன் வாழும் கோயில்
குழு : ஓம்…
ஆண் : சிவனே அதில் வாழும் தெய்வம்
குழு : ஓம்…
ஆண் : பூக்கள் தினம் கொய்து
பூஜை பல செய்து
நான்கு மறை ஓதி
நாடும் அருள் ஜோதி
அழுதால் தொழுதால் வருவானோ…
ஆண் : மனமே அவன் வாழும் கோயில்
குழு : ஓம்…
ஆண் : சிவனே அதில் வாழ்வும் தெய்வம்
குழு : ஓம்…
ஆண் : ஆன்மா திருக்கோயில் விளக்காக
அன்பே அதில் காணும் திரியாக
ஆர்வம் நெய்யாக இடுபவன் நான்
அதனால் ஆசைகள் விடுபவன் நான்
ஆண் : கடல் தனில் நதி சேரா நேரம் எது
சிவனுடன் சேராத ஜீவன் எது
அழுதால் தொழுதால் வருவானோ
ஆண் மற்றும் குழு :
மனமே அவன் வாழும் கோயில்
சிவனே அதில் வாழும் தெய்வம்
ஆண் : நானாய் பிறந்தேனா
நான் அறியேன்
நினைத்தால் இறப்பேனா
நான் அறியேன்
குறைகள் குறையாத மேனி இது
நிறைகள் அறியாத நெஞ்சம் இது
ஆண் : மறை பொருள்தனைக்
காண துடிக்கிறதே
இரு விழி கண்ணீரை வடிக்கிறதே
அழுதால் தொழுதால் வருவானோ….
ஆண் : மனமே அவன் வாழும் கோயில்
குழு : ஓம்…
ஆண் : சிவனே அதில் வாழும் தெய்வம்
குழு : ஓம்…
ஆண் : பூக்கள் தினம் கொய்து
பூஜை பல செய்து
நான்கு மறை ஓதி
நாடும் அருள் ஜோதி
அழுதால் தொழுதால் வருவானோ…
ஆண் மற்றும் குழு :
மனமே அவன் வாழும் கோயில்
சிவனே அதில் வாழும் தெய்வம்