மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு இளம் மொட்டு (மனம்)
மனம் விட்டு சிரித்திட்டால்
மறைந்து ஓடும் துன்பம்தான்
மனம் கெட்டு அழுதிட்டால்
மறைந்து போகும் இன்பம்தான்
சிரித்துப் பாடும் செல்வம் நீ
அணைத்து ஆடும் தங்கம் நீ
கனித்து ஓடும் வைரம் நீ
நினைத்துத் தேடும் இன்பம் நீ (மனம்)
தடுத்தாலும் அடித்தாலும்
எனக்கு ஜோடி நீதானே
கடுக்காதான் பலருக்கும் கொடுத்து
நானும் வந்தேனே இனி உன்
கூட வந்து தாளம் போட்டு
கையைக் கொட்டுவேன் – நமக்குப்
பாடம் சொல்லும் வாத்தியாரும்
நம்ம பக்கம் தான்.....(மனம்)