மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்
இது நியாயமா உயிர் தாங்குமா
நீ வா பெண்ணே தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாத்தி
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
பெண்ணை ஒரு பூவென்று சொல்லி வைத்த பொய் இன்று
என் காதலை கொல்லுதே
தலைமுறைகள் போனாலும் வரைமுறைகள் போகாமல்
தடை போடுதே நியாயமா
காதலை கண்ணுக்குள் அடைத்து ஏனடி என்னை கொன்றாய்
புத்தனும் மண்ணுக்குள்ளே போனதை நீயும் உணர்வாய்
காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்
காதல் ஒரு நோயென்றால் குணப்படுத்த யார் வந்தார்
விடையேதுமே இல்லையே
காதல் ஒரு தீயென்றால் சுட்ட வடு யார் கண்டார்
தடமேதுமே இல்லையே
வேடனிடம் கூண்டு கிளிகள் விருப்பத்தை சொல்லவும் இல்லை
பெண்ணே நீ ஊமையும் இல்லை இருந்தும் ஏன் பேசிடவில்லை
காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்
இது நியாயமா உயிர் தாங்குமா
நீ வா பெண்ணே தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாத்தி