மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
பொங்கும் அழகில் தங்க நிலாவின்
தங்கச்சி பாப்பாவோ
புத்தம் புதிய பூச் செண்டாட்டம்
புன்னகை செய்வாளோ
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா
மாலைத் தென்றல் சொன்னதை கேட்கும் மந்திரி ஆனதம்மா
பூனையும் நாயும் காவல் காக்கும் சேனைகள் ஆனதம்மா
அம்மா அப்பா மடி மேல் இவளின் ராஜாங்கம் நடக்குதம்மா
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
யாரது இங்கே மந்திரி
குட்டி ராணி வந்தா நீ எந்திரி
வணக்கம் வணக்கம்
வணக்கம் வணக்கம் சின்ன ராணி
இங்கு எனக்கிட்ட கட்டளை என்ன ராணி
ஓடி பிடித்து விளையாட
ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட
ஓடி பிடித்து விளையாட
ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட
ஆகட்டும் தாயே அது போல
நீங்க நினைத்ததை முடிப்பேன் மனம் போலே
இவளுக்கொரு தம்பி பயல் இனி மேல் பிறப்பானோ
இளவரசன் நான் தான் என்று போட்டிக்கு வருவானோ