பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு
பெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு
போடவுமே போறாரு
ஆண் : ஏய்…..மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு
பெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு
போடவுமே போறாரு…..
இருவர் : ஏய்…..மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு
ஆண் : மாலை போடவே ஜாலியாகவே
பெண் : ஆளைத் தேடியே ஆடிபாடியே
ஆண் : மாலை போடவே ஜாலியாகவே
பெண் : ஆளைத் தேடியே ஆடிபாடியே
ஆண் : ஒ…..ஹோ……ஒ……ஹோ…..
பெண் : ம்ம்……ம்ம்…..ம்ம்……
ஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு
பெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு
போடவுமே போறாரு
இருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு
ஆண் : ஹ……ஹ…..ஆ……ஹா……
ஆண் : ஆந்தையைப் போல
இவர் முழிப்பதைப் பாரு
ஆண்பிள்ளை சிங்கம் இவர் மாதிரி யாரு
பெண் : பெண்களைக் கண்டால்
பித்தாகி நிற்பாரு
பின்னாலே சென்று இவர் பல் இளிப்பாரு
ஆண் : ஆசை இருக்குது
அத்தைமகள் மீதிலே
ஆசை இருக்குது
அத்தைமகள் மீதிலே
பெண் : ஆனால் கண்ணாடி முன்னாலே
தன்னை இவர் பார்க்கலே
ஆ……ஆனால் கண்ணாடி முன்னாலே
தன்னை இவர் பார்க்கலே
ஆண் : ஒ……ஹோ…..ஒ….ஹோ…..
பெண் : ம்ம்……ம்ம்…..ம்ம்……
ஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு
பெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு
போடவுமே போறாரு
இருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு
ஆண் : ஹ……ஹ…..ஆ……ஹா……
ஆண் : கோட்டானைப் போல் இவர் கூவிடுவாரு
கும்மாளம் போட்டு இவர் தாவிடுவாரு
பெண் : சாப்பாட்டைக் கண்டால்
இவர் யானையாவாரு
தாயாரின் முன்னே இவர் பூனையாவாரு
ஆண் : பட்டிக்காட்டிலே மிட்டா உள்ள மைனரு
பட்டிக்காட்டிலே மிட்டா உள்ள மைனரு
பெண் : பாரு மேல் மாடி உள்ளே
அங்கே வெறும் சைபரு…..
ஆ……பாரு மேல் மாடி உள்ளே
அங்கே வெறும் சைபரு…..
ஆண் : ஒ……ஹோ…..ஒ….ஹோ…..
பெண் : ம்ம்……ம்ம்…..ம்ம்……
இருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு
தோப்புக்கரணம் நூத்தியெட்டு
போடவுமே போறாரு
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு