பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு
லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு
ஆண் : புடிக்காதிங்க புகை புடிக்காதிங்க
உங்க பூவான இதயத்தை கெடுக்காதிங்க
அடிக்காதிங்க தம்மு அடிக்காதிங்க
அத அடிச்சு அடிச்சு நெஞ்சு நோக துடிக்காதிங்க
ஆண் : லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு
ஆண் : சிந்தனைக்கும் சிகெரெட்டுக்கும் சம்மந்தம் இல்லை
நம்ம திருக்குறள் பிறந்த நாளில் சிகெரெட் இல்லை
கம்பனை போல பாட்டெழுத யாருமே இல்லை
அவன் கட்டாயம் பீடி சுருட்டு புடிச்சதே இல்லை
இங்கிலிஷ் காரன் அவன் கத்து தந்த பழக்கம்
இந்தியாவில் ரொம்ப ரொம்ப கெட்டு போச்சு ஒழுக்கம்
ஆளை கொல்லும் புகை இது ஆஸ்துமாவை வளக்குது
ஆளை கொல்லும் புகை இது ஆஸ்துமாவை வளக்குது
ஆண் : லொக்கு லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு ….
ஆண் : கொஞ்சம் கொஞ்சமா பீடி பசியை குறைக்கும்
அது நெஞ்சு முழுக்க புகைய அடைச்சு மூச்சை இழுக்கும்
கட்டி கட்டியா தெனமும் சளியை வளக்கும்
ஒரு கட்டத்துக்கு மேல போயி ரத்தம் வடிக்கும்
ஆண்மையையும் வீரத்தையும் அடக்கி மடக்கி ஒடுக்கும்
ஆயுளிலே பாதியைத்தான் தவணை முறையில் எடுக்கும்
காரமான புகை இது காச காரியாக்குது
காரமான புகை இது காச காரியாக்குது
ஆண் : லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு
ஆண் : புடிக்காதிங்க புகை புடிக்காதிங்க
உங்க பூவான இதயத்தை கெடுக்காதிங்க
அடிக்காதிங்க தம்மு அடிக்காதிங்க
அத அடிச்சு அடிச்சு நெஞ்சு நோக துடிக்காதிங்க
ஆண் : ஹுஹு ஹுஹு ஹுஹு ஹுஹு இருமலு
உன்னை முக்கி முக்கி ஹஹஹ் … உருமலு