பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, எம். எல். ஸ்ரீகாந்த்,
எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : {குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு : கிட்ட வா கிட்ட வா
பெண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
குழு : கட்ட வா கட்ட வா} (2)
ஆண் : வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ
இருவர் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு : கிட்ட வா கிட்ட வா
ஆண் : {இதழ்களில் முத்திரை இட்டது
எத்தனை அத்தனை எண்ணிச் சொல்
பெண் : உனக்கெது சுவையோ சுகமோ
இதமோ பதமோ பெற்றுக்கொள்} (2)
பெண் : வாழைப்பூ மடல் வாடையில் துடிக்க
நூறு பாவங்கள் ஜாடையில் நடிக்க
ஆண் : கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
சும்மா நீ வாவென காலத்தில் அழைக்க
ஆண் : கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
பெண் : கண்ணா நீ வாவென காலத்தில் அழைக்க
பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பெண் குழு : கிட்ட வா கிட்ட வா
ஆண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
ஆண் குழு : கட்ட வா கட்ட வா
குழு : கிட்ட வா கிட்ட வா
பெண் : ரசிப்பதில் என்னவன் மன்னவன்
என்றொரு கற்பனை உண்டாக
ஆண் : ரதங்களில் பற்பல அற்புதம் உன்னிடம்
உண்டென ஒன்றாக
ஆண் : நீலத்தாமரை நீரினில் மிதக்க
பெண் : மஞ்சள் மாங்கனி தேன்துளி தெறிக்க
பெண் : செவ்வானம் போல் மஞ்சம் வாய்விட்டு சிரிக்க
ஆண் : ஜில்லென்ற காற்றினில் சேர்ந்துனை அணைக்க
பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு : கிட்ட வா கிட்ட வா
பெண் : அஹா……ஆஅ……ஹா…..ஆ….
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் : மலர்களில் மெல்லிய கை விரல்
கிள்ளிய பாவனை
பெண் : கனி சுவை தாங்கிய பூங்கொடி
ஏங்கிய காரணம் என்னம்மா
ஆண் : ஜோடி பூங்குயில் பாடலும் மயக்கம்
ஆண் : ஊடல் என்றொரு நாடக தொடக்கம்
பெண் : சொல்லாமல் சொல்வது கன்னியர் வழக்கம்
பெண்ணோடு வேர் என்ன காரணம் இருக்கும்
பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பெண் குழு : கிட்ட வா கிட்ட வா
ஆண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
ஆண் குழு : கட்ட வா கட்ட வா
பெண் : வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
ஆண் : கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ