கேளுங்கோ இதைக் கேட்டு
நல்ல செய்தி கூறுங்கோ
உலகம் போற போக்கைப் பாருங்கோ பாருங்கோ
உண்மைதனைச் சொல்வேன் கேளுங்கோ
ஐயா ஜனங்களே......(உலகம்)
உற்ற ரெத்த பாசமும் பணத்தால் பிரியுது
ஊதாரிதனத்தாலே நாகரீகம் திரியுது
பெற்ற தந்தை தாய்க்கும் துரோகம் புரியுது
பேய் காற்றின் இடி மேகம் போல் வஞ்சம் செறியுது
இந்த பேத புத்தி என்று போகுமோ
ஐயா ஜனங்களே.........(உலகம்)
பட்டினியும் பரிதவிப்பும் பாரில் மிஞ்சுதே
வஞ்சம் கெஞ்சுதே
இந்தப் பரிதாபக் காலம் போகுமோ
பஞ்சம் நீங்குமா
இந்தியாவின் தந்தையாகுமே
நம் காந்தி மகான்
அன்பின் மொழி காற்றில் போகுதே
ஐயா ஜனங்களே.........(இந்த)