சின்னஞ் சிறு பைங்கிளியே நீ தாலேலோ
என் மகனே தாலே தாலோ – முன்
தந்தை கொண்ட அன்பின் மனத்தைத்
தந்தையாகிக் கண்டேன்
என் தந்தையோடு யான் புரிந்த
பாதகத்தின் கொடுமை
உண்மை மனம் உணராமல் சென்றே மகனே
என் உயிரே அனல் ஆழியில் வீழ்ந்தேன்
என் தந்தையோடு பாவி
நானும் செய்த அந்த பிழைகள்
உன் தந்தையான என்னுடன் நீ செய்திடாதே மகனே
தந்தையே முதல் தெய்வமே மகனே
தந்தை தன் தியாகமதுவே வாழ்விது மகனே
வேதமாகும் நீ உணர்வாய் தந்தை ஓதும் மொழியே
நீ ஏதும் துயரம் ஈந்திடாதே தந்தை நோகும்படியே
கண்மணியே நீ தாலேலோ தாலேலோ
விண்மணியே தாலே தாலோ.....