பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர்
ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை
ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
ஆண் : அளவு குறைந்தால் ஆசையும் வெல்லும்
ஆனவரைக்கும் போதுமென்றெண்ணும்
எந்த வீட்டில் ஆசைகள் இல்லை
எந்த வீட்டில் ஆசைகள் இல்லை
எல்லோரையும் வெல்லுவதில்லை
ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
ஆண் : நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும்
ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும்
ஆசை எங்கே முடிந்தது கண்ணே
ஆசை எங்கே முடிந்தது கண்ணே
ஆண்டவன் கூட ஆசையின் பின்னே
ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
ஆண் : ஆசைக் கொண்டது கிடைக்காதென்றால்
கிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ
நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே
நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே
நிம்மதி இறைவன் சன்னதி தானே
ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை
ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை