கட்டழகி பொட்டழகி உன்னக்
கட்டிக்கப் போறவன் யாரு
முத்தழகி முத்தழகி நெஞ்சில்
ஒட்டிக்கப் போறவன் யாரு
மாட்டிக்கிட்டா கட்டிக்குவா
கட்டிக்கிட்டா மாட்டிக்குவா
மானே பொன் மானே.......
கட்டையில்லே நெட்டையில்லே
ஒரு கட்டழகன் வருவான்டா
கட்டழகில் மட்டும் இல்லே
என்ன கட்டிட்டு போயிடுவான்டா
பாண்டியரு வம்சமடா.....ஆஹா
பாரி வள்ளல் அம்சமடா..ஓஹோ
மீச வெச்ச சின்னவன்டா...அப்டியா
ஆச வெக்கும் மன்னவன் டா
என் ராசா மகராசா...ஹோ வாவ்..(கட்டையிலே)
சிரிச்சா கன்னத்துல குழி விழுகும்
அழகுள்ள மகராசா...அம்மாடியோ
நடந்தால் கண்ணு படும் நடையிலொரு
ராஜநடை கொண்ட ராசா..அம்மாடியோ
அவன் பேர் சொல்லி நாள்தோறும் குயிலும் கூவுமே
அவன் கை காட்டும் ஊர் நோக்கி கங்கை ஓடுமே
அவன் தொட்டாலே எப்போதும் பூ வாசனை
அவன் தெம்மாங்கு சங்கீதம் மண் வாசனை
உலகம் எங்கும் பேரு கொண்ட மன்னனுக்கு
பேரு சொல்லும் பிள்ளை தானே...(கட்டையிலே)
இது போல் ஜோடி உண்டா அசந்து நின்னு
ஊரு சனம் பேச வேணும்......ஆத்தாடியோ
வருசம் ஒண்ணு ரெண்டா புள்ள குட்டிகள்
நானும் பெத்துப் போட வேணும்..அடியாத்தி..
அட எம் புள்ள இங்கிலாந்து ஸ்கூலு போகணும்
அவன் ஏரோப்ளேன் ஏறி வந்து என்ன பாக்கணும்
அட அப்பாட்ட பேசணும் இங்க்லீசுல
நான் எப்போதும் கேக்கோணும் என் காதுல
மனசுக்குள்ள ஓடுகிற எண்ணங்கள
சொல்ல ஒரு சொல்லு இல்லையே..(கட்டையிலே)