எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது
எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது
சொத்துகள பாகம் போட்டு பங்கு வெச்சா போதுமா
பெத்தவளின் பாசத்தியே பங்கு வெக்க முடியுமா..(எந்த)
மல்லிகப் பூ செதறிருச்சு மாலையாக மாறுமா
மனசு உண்ம மறந்ததுன்னா மனுஷ ஜென்மம் தேறுமா
மத்ததெல்லாம் பத்திக்கிட்டா தண்ணீரால அணைக்கணும்
சத்தியமே பத்திக்கிட்டா கண்ணீரால அணைக்கணும்
பெத்த போது பால் கொடுக்க ஊரார கேட்டாளா
பிரியும் போது கொடுத்ததெல்லாம் திருப்பி அவ கேட்பாளா
பெத்தவள மறந்தவனோ பொறந்தது தான் பாவம்
பாவத்தையும் பிள்ளையின்னு சொமந்தவ தான் தெய்வம்