பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சைமன் கே. கிங்
பெண் : கண்ணே கருவிழியே
கலையா கனவே
இதமா என் மடியில் விழுந்த நிலவே
தெய்வங்கள் கேட்டாலும் கிடைக்காத
என் வரமே என் வரமே
பெண் : கண்ணே கருவிழியே
கலையா கனவே
இதமா என் மடியில் விழுந்த நிலவே
ஜென்மங்கள் கேட்டாலும் கிடைக்காத
என் வரமே என் வரமே
பெண் : நீ முதல் முறையா
அழும்போது
அம்மா நான் சிரிச்சேனே
உலகால வந்தாயே என் செல்வமே
பெண் : நீ ஊர் உலகம் அறிஞ்சாலும்
தோள் ஒசர வளர்ந்தாலும்
என் மடியில் தாலாட்டி தாங்கிடுவேனே
பெண் : ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ
ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ
பெண் : வாய் மொழி வேணா குரல் வேணா
அறியாம இருப்பேனா
என் கருவின் வாசத்தா
நான் மறப்பேனா
இந்த பூலோகம் அழிஞ்சாலும்
பூங்காத்து எரிஞ்சாலும்
நான் கொடுக்கும் பாசத்த
கொறைச்சிடுவேனா
பெண் : தான் ரத்தத்த உணவாக்கி
பொழுதெல்லாம் கனவாக்கி
பொழிஞ்சாலே பாசத்த
இது போல் வருமா
பெண் : ஒரு தாய் இல்லா உலகத்த
முடி சூட்டி தந்தாலும்
தாலாட்டு பாட்டுக்கு ஈடாகுமா
பெண் : ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ
ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ