கண்ணீர் துளியால் என்றும் காதல்
சோலை மலரும் என்பதே நியதியா
அன்புக்கடிமை நெஞ்சம்
துன்பக் கடலாகிடும் என்பதே நியதியா
சோதனை கொடிதல்லவோ......
ஆசை இன்பத் தேனே உன்
நேசத்தைப் பெற்றேனே ஆறாது நெஞ்சமே
உள்ளம் தணலாக ஓயாது ஏங்கி சாக
உண்டாச்சே தனிமை உண்டாச்சே தனிமை
கசப்பான நிலைமை
நட்பைத் தேடுதல் பிழை
என்பதும் நியாயமோ இதுதான் நியதியா
அன்புக்கடிமை நெஞ்சம்
துன்பக் கடலாகிடும் என்பதே நியதியா
கண்ணீர் துளியால் என்றும் காதல்
சோலை மலரும் என்பதே நியதியா
நெஞ்சில் தைக்க வாளாய்
உன் வாழ்க்கை பாதை தன்னில்
நின்றேனே காதலா
நீங்காதே என் நெஞ்சில் தேன்பாகு என்று நீயே
நிற்கின்றாய் என்றுமே நிற்கின்றாய் என்றுமே
கற்கண்டே கன்னலே
காதல் கொண்டால் பழிப்பார் இந்த
உலகில் பொல்லார் என்பதே நியதியா
கண்ணீர் துளியால் என்றும் காதல்
சோலை மலரும் என்பதே நியதியா
அன்புக்கடிமை நெஞ்சம் துன்பக்
கடலாகிடும் என்பதே நியதியா
சோதனை கொடிதல்லவோ......